வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதிமுடிவுகள் இன்று வெளியாகியது.அதனடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 20 பேருக்கு தொற்றிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர கொத்தணி கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 222ஆக அதிகரித்துள்ளது.