அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்:வடக்கு சர்வ மதத்தலைவர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

Report Print Rakesh in சமூகம்
25Shares

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ். மாவட்டத்தில் உள்ள சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த மகஜரில் நேற்று சர்வமதத் தலைவர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டு இன்று யாழ்.ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி மீஹாகஜதுரே ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மதத்தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜரை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் தேரரிடம் வழங்கி வைத்தார்.