இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

Report Print Ajith Ajith in சமூகம்
103Shares

பெண் சுகாதாரப்பணியாளர் ஒருவருடன் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் சபை இந்த அறிக்கையை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசந்த டி மெலிடம் கோரியிருக்கின்றது.

இந்த பெண் சுகாதாரப்பணியாளர் இலங்கை கிரிக்கட் அணியின் மருத்துவ விடயங்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருடன் தற்போது இலங்கையின் டெஸ்ட் கிரிக்கட் அணியில் பங்கேற்கும் வீரர் ஒருவரே தவறாக நடந்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து இது குறித்த உண்மை தரவுகளை தருமாறு அசந்த டிமெலிடம் கோரப்பட்டு;ள்ளது.