ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது

Report Print Theesan in சமூகம்
30Shares

வவுனியா - ஆசிகுளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நான்கு பேரை வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதியில் சோதனைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதிகளை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.