இலங்கைக்குள் இன்று மாத்திரம் 875 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரொனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 56ஆயிரத்து 76ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறுவோரின் எண்ணிக்கை 7816 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.