மட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Saravanan in சமூகம்
147Shares

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

பொலிஸார், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 11 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 533 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் எழுந்தமானமாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸார், செங்கலடி சுகாதார பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கும்,ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 2 பேர் உட்பட 11 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் புதிய தொற்றாளராக கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி சுகாதார பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்டத்தில் இதுவரை 533 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.