சுகாதார அமைச்சையும் விட்டுவைக்காத வைரஸ் - 11 பேர் கொரோனாவுக்கு இலக்கு!

Report Print Rakesh in சமூகம்
140Shares

கொரோனா வைரஸ் தொற்று சுகாதார அமைச்சுக்குள்ளும் புகுந்து பலரைத் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளது.

சுகாதார அமைச்சைச் சேர்ந்த பணிக்குழாமினர் 11 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புபட்டிருந்த 70 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.