பெற்றோருக்கு பல சந்தர்ப்பங்களில் தூக்க மாத்திரை! சிறுமிக்கு நேர்ந்த அவலம்

Report Print Murali Murali in சமூகம்
1296Shares

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சந்தேகநபர் ஒருவரை அத்துருகிரிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இரண்டு ஆண்டுகளாக ஆபாச காணொளிகளை காண்பித்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, சிறுமி சந்தேகத்திற்கிடமான மாத்திரையை எடுத்துக் கொண்டார், இதனை அவதானித்த தந்தை, அது குறித்து விசாரித்துள்ளார்.

அது கருத்தடைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மாத்திரை என தெரியவந்தது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு வந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


you may like this video...