இலங்கையின் ஒரு பகுதியில் நில அதிர்வு

Report Print Vethu Vethu in சமூகம்
980Shares

பதுளை, வலப்பனை பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலஅதிர்வு மஹகனதராவ, பல்லேகெலே மற்றும் ஹக்மன நில அதிர்வு அளவீடுகளில் பதிவாகியுள்ளதாக அனுர வல்பொல தெரிவித்தார்.

இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திற்கும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.