பராமரிப்பற்ற காணிகள் பிரதேச சபையின் உடமையாக்கப்படும்: தவிசாளர் தெரிவிப்பு

Report Print Sumi in சமூகம்
113Shares

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்கத் தவறினால் குறித்த காணியானது சபையின் உடமையாக்கப்படும் என நல்லூர் பிரதேசசபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த காணிகளை பிரதேசசபை உறுப்பினர்களுடன் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் உள்ள காணிகள் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாகக் காட்சியளிக்கின்றது.

தற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும், அழகாகவும் பேணுவதற்கு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணி உரிமையாளர்கள் தமது காணிகளை உடனடியாக துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பராமரிப்பற்ற காணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேசசபையின் உடமையாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.