வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் வாகனங்கள் கடும் சேதம்

Report Print Theesan in சமூகம்
153Shares

வவுனியா - புளியங்குளம் முத்துமாரி நகர்ப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு வாகனங்கள் கடுமையாக சேதமடைந்த போதிலும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

தென்பகுதியிலிருந்து யாழ். நோக்கி விளம்பர பதாதைகளை ஏற்றிச் சென்ற கண்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் யாரும் இல்லாமையால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் இரண்டும் கடுமையான சேதமடைந்துள்ளன.

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.