கரைச்சி பிரதேச சபையின் வீதியைப் பயன்படுத்த விசேட வரி

Report Print Yathu in சமூகம்
87Shares

கரைச்சி பிரதேசசபையின் வீதியைப் பயன்படுத்த விசேட வரி அறவிடுவது தொடர்பில் விசேட அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட சபை அமர்வின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் சபை தலைவர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.

வர்த்தக செயற்பாடுகளிற்கு வரி அறவிடல் தொடர்பில் குறித்த விசேட அமர்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கரைச்சி பிரதேசசபையின் வீதியைப் பயன்படுத்தும் ரிப்பர், ரக்கர் போன்ற வாகனங்களில் மணல், கல், கிரவல், மண் ஆகியன ஏற்றிப் பயணிக்கும் போது அதற்கு வரி அறவீடு செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக கியூப் ஒன்றுக்கு 100 ரூபா அறவிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.