கிளிநொச்சி கந்தன்குளத்தைப் பாதுகாக்க நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர்க் கசிவைக் கட்டுப்படுத்த கமநல சேவைகள் திணைக்களமும், இராணுவத்தினரும், பொதுமக்களும் பணியில் ஈடுபட்ட போதிலும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினரும், நீர்ப்பாசன திணைக்களத்தினரும் குளத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் த.ராஜகோபு குறித்த நீர் கசிவைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவரது தலைமையில் நீர் கசிவைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.