கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் மரணம்

Report Print Saravanan in சமூகம்
1491Shares

மட்டக்களப்பு கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரின் மனைவி கொரோனா தொற்றினால் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்த முதியவரின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியான அரசடி கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு அங்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.