நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா நோயாளர்கள் பதிவு

Report Print Kamel Kamel in சமூகம்
86Shares

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் 887 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியிருந்தது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 337 பேர் கொழும்பு மாவட்டத்தையும், 136 பேர் கம்பஹா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்றாளிகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.