கொரோனாத் தடுப்பூசி போடுவது பற்றி நாளை 3 இடங்களில் விசேட ஒத்திகை!

Report Print Rakesh in சமூகம்
129Shares

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி தருவிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி போடுவது எப்படி என்பது குறித்து நாளை விசேட ஒத்திகையை நடத்த சுகாதார அமைச்சுத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒத்திகை பிலியந்தலை மற்றும் ராகம வைத்தியசாலை உள்ளிட்ட 3 இடங்களில் நடத்தப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசி செயல்முறை தொடங்கிய பின்னர் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை அடையாளம் காண்பதில் ஒத்திகை கவனம் செலுத்தும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் எத்தனை பேருக்குத் தடுப்பூசி போடலாம் என்று ஆராயப்படும்.

தற்போது 26 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற நோயாளிகள் 79 மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த விடுமுறை நாள்களில் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணித்ததால் கடந்த சில நாள்களில் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.