இலங்கையில் கொரோனாவின் பிடியிலிருந்து 48,617 பேர் மீண்டனர்!

Report Print Rakesh in சமூகம்
24Shares

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 633 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 183 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவால் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இன்று வரை 56 ஆயிரத்து 76 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.