சுகாதார அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதி

Report Print Kamel Kamel in சமூகம்
439Shares

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா, தற்பொழுது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்டிஜன் பரிசோதனையின் மூலம் பவித்ராவிற்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பீ.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தம்மிக்க பாணியை உட்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் அமைச்சர் பவித்ராவிற்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறித்து சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை.