50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நோய்த்தடுப்பு கொள்கையைக் கொண்டுள்ள இலங்கை

Report Print Ajith Ajith in சமூகம்
24Shares

இலங்கை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் ஒரு பயனுள்ள தேசிய நோய்த்தடுப்பு கொள்கையைக் கொண்டுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது அரசாங்கத்துக்கு சவாலாக இருக்காது என்று முதன்மை சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதில் கிட்டத்தட்ட 99 வீதமான தடுப்பூசிகளை வெற்றிப்பெற்றதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2020 பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகையில் 50 முதல் 55 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் 20 சதவீதம் இலவசமாக வழங்கப்படவுள்ளது என்றும் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.