வடக்கில் மூன்றாவது கொரோனா மரணம் பதிவானது!

Report Print Rakesh in சமூகம்
227Shares

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பிய ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரின் மரணம் மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா சாவாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயால் உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.

மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த 63 வயதுடைய இஸ்லாமியரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் நாள்பட்ட நோயால் பாதிப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியிருந்தார்.

அவர் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மாதிரிகள் இன்று எடுக்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் ஜனாஸா மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.