அரசுக்கு எதிராகக் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Rakesh in சமூகம்
580Shares

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளிக்கும் முயற்சிகளுக்கு எதிராகத் துறைமுக தொழிற்சங்கங்களால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

புறக்கோட்டையிலிருந்து கோட்டையில் அமைந்துள்ள துறைமுகங்கள் அமைச்சு வரையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

துறைமுகத் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து கொண்டது.

துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கு வழங்கும் திட்டத்தை அரசு கைவிடும் வரையில் தமது போராட்டம் தொடரும் என்று துறைமுகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


You May Like This Video...