போதைப்பொருள் கடத்தல் மோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சென்னையில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுனர்.
அத்துடன், 10 பில்லியன் ரூபாய் பெறுமதியான 100 கிலோ ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் தங்களது அடையாளங்களை மறைத்து சென்னையில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் எம்.எம்.எம். நவாஸ் மற்றும் முகமது அஃப்னாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பன்னாட்டு ஹெரோயின் சிண்டிகேட்டில் முக்கியமான பதவிகளை வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.