இந்த ஆண்டின் இறுதி 20 நாட்களில், 766 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அங்கு 498 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 62 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கண்டறியப்பட்டனர். கொழும்பு நகரசபை பகுதியில் இருந்து 19 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.