இலங்கையில் நாய்களிடையே பரவும் வைரஸ்! பல நாய்கள் மரணம்

Report Print Murali Murali in சமூகம்
434Shares

இலங்கையில் நாய்களிடையே ஒரு வகை வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாய்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் முதலில் நாய்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் தொடங்கி பின்னர் இரத்தத்துடன் வயிற்றுப்போக்குக்கு என்ற நிலைக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை குணப்படுத்துவது கடினம் மற்றும் பெரும்பாலும் ஆபத்தான நிலையில் நாயின் மரணத்துடன் முடிகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர கருத்து வெளியிடுகையில்,

“தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணம்வரை அது தொடர்கின்றது என்று தெரிவித்துள்ளார்.