மனித-யானை மோதலுக்கு தீர்வு காணக்கோரி உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Ajith Ajith in சமூகம்
40Shares

ஹம்பாந்தோட்டையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு விவசாயிகள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மனித-யானை மோதலுக்கு தீர்வு காணக்கோரியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானது என அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.