யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள்! மதுரையில் வழக்கு தாக்கல்

Report Print Murali Murali in சமூகம்
682Shares

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழக மீனவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தங்கச்சிமடத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த நான்கு மீனவர்களின் உடல்கள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இந்நிலையில், கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீனவர்களை கடற்படை கைது செய்ய முயன்ற போது படகு விபத்துக்குள்ளாகியது என்று இலங்கை கடற்படை தெரிவித்தது.

இதன்போது படகில் இருந்த இந்திய மீனவர்கள் நால்வர் காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழக மீனவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.