வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை

Report Print Theesan in சமூகம்
156Shares

வைரவபுளியங்குளத்தில் இரவு நேரத்தில் மது அருந்திய இளைஞர் குழு செய்து வரும் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நேற்று இரவு 11 மணியளவில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கு.திலீபனின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா பொலிஸார் விசேட திடீர் சோதனையை நடத்தியுள்ளனர்.

இதன் பிரகாரம் அப்பகுதியிலும் ஏனைய இடங்களிலும் உள்ள மதுபான சாலைகளில் மது அருந்திவிட்டு மோட்டார்சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்த இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான பொருட்களை வைத்திருந்தனரா எனவும் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த பகுதியில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.