அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Report Print Banu in சமூகம்
1500Shares

நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு ஒரு நிலையான விலையை விதிக்க உடன்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் இது நடைமுறைக்கு வருமென கூறப்படுகிறது.

அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஏற்றுமதியாளர்களுக்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நேரடி இறக்குமதியாளர்களிடமிருந்து பெறப்பட்ட உயர்தர பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தமும் எட்டப்பட்டுள்ளது.

உயர்தர பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென அமைச்சர் இதன்போது கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Like This Video...