இந்திய கரையோர பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ள தமிழக மீனவர்களின் சடலங்கள்

Report Print Ajith Ajith in சமூகம்
115Shares

இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றில் மோதி படகு மூழ்கியதில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் நால்வரினதும் சடலங்கள் இன்று இந்தியக் கரையோர பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்த சடலங்கள், காங்கேசன்துறையிலிருந்து சர்வதேச கடல் எல்லைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்படவுள்ளன.

நெடுந்தீவு கடலுக்கு அப்பால் உள்ள பகுதியில், 2021 ஜனவரி 18ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, தமிழக மீன்பிடி படகொன்றும் இலங்கை கடற்படை கப்பலும் மோதிக் கொண்டன.

இதன்போது இழுவைப்படகில் இருந்த நான்கு தமிழக மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது மரணமான தமிழக மீனவர்கள் நால்வரின் சடலங்களும் காங்கேசன்துறை கரைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே அவை இன்று இந்தியத் தரப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.