அம்பாறை - கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் கரைவலை தோணி மீனவர்களுக்கு அதிகளவான சூரை மீன்கள் நேற்று பிடிபட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக இப்பகுதியில் கரைவலை மீன்பிடியானது மிகவும் குறைந்திருந்தது.
இந்த நிலையில் அதிகளவான சூரை மீன்கள் பிடிபட்டமை குறித்து கரைவலை தோணி மீனவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக இந்த சூரை இன மீன்கள் ஆழ்கடல் படகுகளுக்கே அதிகமாக பிடிபடும் என்ற போதிலும் கரைவலை தோணிகளுக்கு அதிகமாக பிடிக்கப்பட்டுள்ளமை அரிய விடயம் என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலதிக மீன்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.