வவுனியாவில் வீடு உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

Report Print Theesan in சமூகம்
117Shares

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் தமது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் மறுநாள் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கரை பவுண் நகை என்பன கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவனியாவில் கடந்த சில நாட்களாக நகை திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.