திருகோணமலை கடற்பரப்பில் லைபீரிய நாட்டுக்கு சொந்தமான வர்த்தக கப்பல் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
அபூதாபியில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்குச் சீமெந்து கொண்டு வரும் கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
யால சாரணாலயத்தின் இலுக்குபட்டி முனையில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்திற்கு இலக்காகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் ஆழமில்லா கடற்பரப்புக்கு வந்துள்ளது எனவும், அங்கு கற்பாறையில் மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளுக்காக இலங்கைக் கடற்படையின் படகுகள் குறித்த பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.