கட்டு துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
34Shares

திருகோணமலை-ரங்கிரிபொத்த உல்பொத்த பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கோமரங்கடவல-நாவுல் பொத்த பகுதியைச் சேர்ந்த ஆர்.ராஜகருணா (50 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கிக்குப் போடுவதற்கு ரவைகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவர் செய்த ரவைகள் வெடித்ததிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்தவர் நாகூரை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் தற்பொழுது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.