தாயுடன் சென்ற 9 மாத குழந்தை விபத்தில் சிக்கி பரிதாபமாக பலி!

Report Print Kanmani in சமூகம்
168Shares

மொரகொட - மஹதிவுல்வெவ பகுதியில் உழவு இயந்திரமொன்றில் சிக்கி 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உழவு இயந்திரத்தின் பின்னால் தாயும், குழந்தையும் அமர்ந்து சென்றுள்ளதுடன், திடீரென தாயின் கை தவறி குழந்தை கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உழவு இயந்திரத்தில் சிக்கிய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நாமல்புர பகுதியை சேர்ந்த 9 மாதம் வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.