வடக்கில் இன்றும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Rakesh in சமூகம்
214Shares

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 373 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 16 பேர் உட்பட்ட 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 16 பேருக்கும், யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்த வெளி மாகாணங்களைச் சேர்ந்த 06 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.