மட்டக்களப்பில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளமையினால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

Report Print Kumar in சமூகம்
85Shares

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அதனை கட்டுப்படுத்தும் முகமாக போரதீவுப்பற்று பிரதேச சபையினால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் சென்ற பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தம்பலவத்தை,சங்கபுரம்,மண்டூர் ஆகிய பிரதேச சபை பொது நூலகங்களுக்கு போரதீவுப்பற்று பிரதேச சபை ஊழியர்களினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 -01 -2021 ம் திகதி மண்டூர் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 21 வயதுடைய இளைஞர் இனங்காணப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்ற நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடன் தொடர்புடைய 80 பேரும், 21 குடும்பங்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மண்டூர் பிரதேசத்துக்குரிய பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அதன் காரணாக மண்டூர் பிரதேசத்தில் உள்ள பொது நூலகங்களில் தொடர்புடையவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், 18- 1- 2021ம் திகதி தொடக்கம் மண்டூர் பொது நூலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

25-01-2021 ம் திகதி மண்டூர் பிரதேசத்துக்குரிய பொதுச்சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைவாக புதிய நூலக உதவியாளர்கள் மூலம் மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி, பிரதேச சபை செயலாளர் பா. சதீஸ்கரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இன்று சங்கர்புரம்,தம்பலவத்தை,மண்டூர் பொது நூலகங்களுக்கு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச சபை ஊழியர்களினாள் கிருமித் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.