அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 15 புதிய நீதியரசர்களுக்கான உத்தியோகபூர்வ அமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாகவே இந்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுனா ஒபசேகர உட்பட எட்டு நீதியரசர்களுக்கான முதல் அமர்வு 2021 ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவிருந்தது.
ஏனைய ஏழு நீதியரசர்களுக்கான அமர்வு ஜனவரி 27ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த ஒத்திவைப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.