நாளை முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

Report Print Kamel Kamel in சமூகம்
90Shares

நாளை முதல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நாட்டில் ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும் நாளைய தினம் முதல் வழமையான ரயில் நேர சூசிகைகளுக்கு அமைய ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து தலைமன்னார் வரையில் பயணிக்கும் ரயில் மறு அறிவித்தல் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் நகரங்களுக்கு இடையிலான நான்கு ரயில் சேவைகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.