மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் நடத்தப்பட்ட அன்டிஜன் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 17 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
இவற்றில் 14 பேர் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினையும் ஒருவர் காத்தான்குடியினையும் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் எனவும் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 555 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 359 பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 186பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஆறு பேர் மரணமடைந்துள்ளதாகவும் ப அவர் மேலும் தெரிவித்துள்ளார்.