கன்னாட்டி அ.த.க.பாடசாலை விரைவில் திறக்க நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்
18Shares

நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள கன்னாட்டி அ.த.க.பாடசாலை விரைவில் திறக்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கு. திலீபன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாகக் கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அக்கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் ஆராயச் சென்ற போதே மக்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.