தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை! கடும் அதிருப்தியில் தொற்றாளர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்
1773Shares

பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் தொற்றாளர் காலை உணவை நிராகரித்துள்ளனர்.

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

உணவுகளில் புழுக்கள் இருப்பதாகவும் இது தொடர்பில் ஒருவரும் பொறுப்பேற்பதில்லை என சிகிச்சை பெறுபவர்கள் கூறியுள்ளனர்.

“இங்கு கிடைக்கும் உணவு சாதாரண மக்களால் உட்கொள்ள முடியாதவைகளாகும். காலை உணவுகளில் புழுக்கள். இதனை கூறினால் அதற்கு பொறுப்பேற்க ஒரு அதிகாரிகளும் இல்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் மிருகங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்று பிற்பகல் சுத்தமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தலைமன்னார், கலேவெல, கம்பஹா, நுவரெலியா, கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த 136 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You may like this