ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Report Print Steephen Steephen in சமூகம்
28Shares

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேலும் இரண்டு பிரதேசங்களை இன்று அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 140 போலான தெற்கு கிராம சேவகர் பிரிவில் மெல்கொனிய கிராம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் சில பகுதிகள் இன்று அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேசங்களில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.