பசறை தேசிய பாடசாலையில் கொரோனா தொற்றிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
87Shares

பதுளை - பசறை தேசிய பாடசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது என கொரோனா பரவல் தடுப்பு பிரிவின் பதுளை மாவட்ட குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக இன்றைய தினம் எந்த மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்பதுள்ளதுடன், ஆசிரியர்களின் வருகையும் குறைந்துள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாட ஊவா மாகாண சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள், பாடசாலைக்கு சென்று கலந்துரையாடியுள்ளனர்.