கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று கண்டறியப்பட்ட 843 பேரில் 480 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இதில் 242 பேர் கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்டவர்களாவர்.இதனை தவிர கல்கிஸ்ஸை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில் கொழும்பில் மாத்திரம் இதுவரையானக் காலப்பகுதியில் 22ஆயிரத்து 853 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று மாத்திரம் கம்பஹாவில் இருந்து 86பேரும் களுத்துறையில் 40 பேரும் கண்டியில் இருந்து 35 பேரும் கொரோனாவின் தாக்கத்துக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.