மட்டக்களப்பில் வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று மீட்பு

Report Print Kumar in சமூகம்
42Shares

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கைக்குண்டு விடுதலைப்புலிகள் காலத்தில் கைவிடப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குறித்த பகுதிக்கு வருகை தந்து சோதனைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த கைக்குண்டினை நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.