கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்
55Shares

நாட்டில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரொனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இது ஏற்கனவே பரவியுள்ள கொத்தணிகளில் மாத்திரம் வரையறுக்கப்படாத வகையில் பரவி வருகின்றது.

பண்டிகைக்காலத்தில் பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துக்களை மேற்கொண்டதன் காரணமாகவே பரவலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.