சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரவுடன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு பேணியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் வநச்த யாபா பண்டார கடந்த 19ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினருடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்களை கண்டறியும் நோக்கில் சீ.சீ.ரீ.வி காணொளிக் காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நாடாளுமன்றின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கு இலக்கான சுகாதார அமைச்சருடன் நெருங்கிய தொடர்பு பேணியதன் காரணமாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணரட்னவும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.