வவுனியாவில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Report Print Theesan in சமூகம்
54Shares

வவுனியாவில் 13 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேருக்குத் தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் கடந்த ஒருமாத காலப்பகுதியில் வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ளது.