150 பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்வில் 12 பேருக்கு கொரோனா

Report Print Vethu Vethu in சமூகம்
193Shares

அழுத்கம பிரதேசத்தில் நிகழ்வு மண்டபம் ஒன்றின் 35 ஊழியர்களுக்கு மேற்கொண்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மண்டபத்தில் நேற்றைய தினம் 150 பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகில் நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் சமையல் கலைஞர் உட்பட 12 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானமை உறுதியாகி உள்ளது. ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.