இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் நால்வர் பலி

Report Print Murali Murali in சமூகம்
77Shares

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது.

பேருவளை, தெரனியாகலை, வரகாகொட மற்றும் கொழும்பு 8 ஆகிய பகுதிகளை சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இன்றும் 737 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 55 ஆயிரத்து 288 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.